சகிப்பின்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த கருத்திற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மத்தியில் இருந...
சகிப்பின்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த கருத்திற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து அவர் மனைவி கூறியதாக அமீர்கான் தெரிவித்த கருத்து மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று அமீர்கான் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கருத்து மிகவும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து அமீர்கான் பேசியதாவது:-
இந்தியாவை விட பிரிவினைகள் அதிகமுள்ள நாடு வேறு எதுவும் இல்லை. நான் இந்தியாவில் தான் பிறந்தேன், இங்கு தான் இறப்பேன், ஒருபோது வெளியேறமாட்டேன்.
இந்தியா சகிப்பின்மை நாடாக உள்ளது என்றோ நாட்டைவிட்டு வெளியேறுவேன் என்றோ நான் ஒருபோதும் கூறவில்லை. என்னுடைய கருத்தால் காயமடைந்தவர்களின் வலியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
என்னுடைய நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். எப்பொழுதெல்லாம் நான் வெளிநாடு செல்கிறனோ, என்னால் இரண்டு வாரங்களுக்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியாது. வீட்டை விட்டு பிரிந்த துயரத்தில் மூழ்கிவிடுவேன்.
இவ்வாறு கூறினார்.
அமீர்கானின் இந்த பேட்டியில் போது நடிகர் சித்தார்த் உடன் இருந்தார். ”ஒவ்வொரு நாட்டிலும் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். அதனால் வெளிப்படையான எதிர்மறை கருத்து தெரிவிக்கக் கூடாது.” என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கருத்து தெரிவித்ததை அடுத்து அமீர்கான் இந்த விளக்கத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
