நடிகர் : ஆண்டி ஆன் நடிகை : ஜெனீபர் சே இயக்குனர் : மார்கோ மேக் இசை : யிங் வா வாங் ஓளிப்பதிவு : கிங் பை மியூ படத்தின் கதை 1980-ல் தொடங்குகிறது...
நடிகை : ஜெனீபர் சே
இயக்குனர் : மார்கோ மேக்
இசை : யிங் வா வாங்
ஓளிப்பதிவு : கிங் பை மியூ
படத்தின் கதை 1980-ல் தொடங்குகிறது. இண்டர்போல் ஏஜெண்டாக இருக்கும் சம்மோ, ஒருநாள் பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பல் பிடித்து, அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களையும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்கிறார். அதன்பின்ன சம்மோ தனது மனைவி, தாய் உள்ளிட்டோருடன் ஒரு பெரிய குடும்பமாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
சம்மோவால் பாதிக்கப்பட்ட கடத்தல் கும்பல் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிட திட்டமிடுகிறது. அதற்காக மேடம் ரோஸ் தலைமையிலான ஒரு கும்பலை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. அந்த கும்பல் சம்மோவின் குடும்பத்தினர் அனைவரையும் சுட்டுக் கொல்கிறது.
ஆனால், சம்மோவின் 5-வயது மகளான ஜெனிபரை மட்டும் கொல்லாமல் கடத்தி செல்கின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சம்மோ சில குண்டு காயங்களுடன் உயிர் பிழைக்கிறார்.
கடத்தி செல்லப்பட்ட அந்த சிறுமிக்கு மருத்துவர்களின் உதவியுடன் பழைய நினைவுகளை தெரியவிடாமல் செய்கிறாள் மேடம் ரோஸ். பின்னர் ஜெனிபர் ஒரு அழகான பெண்ணாக விபச்சார விடுதியில் வளர்க்கப்படுகிறாள்.
15 ஆண்டுகளுக்கு பிறகு கதை மீண்டும் பயணமாகிறது. ஜெனிபர் கொள்ளை கும்பலால் மூளை சலவை செய்யப்பட்டு கைதேர்ந்த கொள்ளைக்காரியாக மாறிவிடுகிறாள் ஜெனிபர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ரோஸ் சொல்லும் சில வேலைகளையும் அவ்வப்போது செய்து வருகிறாள்.
இதனிடையே மீண்டும் தனது பணியை தொடர்ந்து வரும் சம்மோ, மேடம் ரோஸ் கும்பல் குறித்த உண்மைகளை கண்டறிந்து வருகிறார். அவர் உண்மையை கண்டறிந்து வருவது ரோஸ்க்கு நெருக்கடியை உருவாக்க ஒரு திட்டம் தீட்டுகிறாள். இண்டர்போல் ஏஜெண்டான சம்மோவை கொலை செய்வதற்காக அவரது மகளான ஜெனிபரை அனுப்புகிறாள்.
தந்தையும் மகளும் நேருக்கு நேர் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தந்தையும் மகளும் ஒன்று சேர்ந்தார்களா? கொள்ளைக்காரி மேடம் ரோஸ் பிடியில் இருந்து தப்பித்தார்களா? என்பது தான் மீதிக்கதை.
படம் ஜப்பான், அமெரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட இடங்களில் பயணமாகிறது. முந்தையை இரண்டு படங்களை விட இதில் கொஞ்சம் கிளுகிளு காட்சிகள் குறைவு தான். சம்மோ தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
அதேபோல், நாயகியான ஜெனிபர் ஒரு தேவதையை போல் வந்தாலும் அவ்வவ்போது அதிரடியில் மிரட்டுகிறார். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் நமக்கு விருந்தளிக்கின்றன. அதேபோல், தந்தை சம்மோவை அவரது வீட்டில் ஜெனிபர் பார்க்கும் காட்சிகள் செண்டிமெண்டானவை.
மொத்தத்தில் ‘நேக்கட் சோல்ஜர்’ ரசிக்கலாம்.
