சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை ஓரளவுக்கு தற்போது முடிந்துள்ளது. இருந்தாலும் இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்தாக இன்னும் ஒரு பேச்சு நிலவுகிறது.இ...
சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை ஓரளவுக்கு தற்போது முடிந்துள்ளது. இருந்தாலும் இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்தாக இன்னும் ஒரு பேச்சு நிலவுகிறது.இதனால் தனுஷ்க்கும், அனிருத்துக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டது. இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் தனுஷ் அனிருத் இசையமைக்கும் ரம் என்ற படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அனிருத்தை குறிப்பிடவில்லை. இதனால் பிரிவு உறுதி என கூறப்பட்டது.இந்நிலையில் நேற்று தனுஷ் மலேசியாவில் அனிருத் நடத்தப்போகும் இசைக்கச்சேரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் இந்த சர்ச்சையை முடிவுக்கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது.