ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம்-3 படம் எஸ்-3 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அதே அன...
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம்-3 படம் எஸ்-3 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அதே அனுஷ்காவே, அதற்கடுத்த பாகத்திலும் நடித்தவர், இப்போதும் எஸ்-3-யிலும் நடித்து வருகிறார். மேலும் முதல் இரண்டு பாகங்களிலும் சூர்யா-அனுஷ்காவை காதலர்களாக காண்பித்த ஹரி, இந்த எஸ்-3யில் கணவன்-மனைவியாக்குகிறாராம். அதுவும் படத்தின் க்ளைமாக்சில்தான் நடக்கிறதாம். அதனால் அதுவரைக்கும் சூர்யா-அனுஷ்காவின் லவ் ரொமான்ஸ் தொடர்கிறதாம்.
மேலும், முதல் இரண்டு பாகங்களிலும் வெயிட் போட்டிருந்த அனுஷ்காவை உடம்பை குறைத்து விட்டு வருமாறு அனுப்பிய டைரக்டர் ஹரி, இந்த முறை அவர் பாகுபலி-2வுக்காக தன்னை தயார்படுத்தி வைத்திருந்த அதே வெயிட் உடம்போடு ஓகே பண்ணி விட்டாராம். காரணம், இந்த முறை கதைப்படி அவரது உடலமைப்பு வெயிட் போட்டிருக்க வேண்டுமாம். மூன்றாவது பாகத்திலும் ஸ்லிம்மாகவே காண்பித்தால் சரியாக இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் டைரக்டர். இதன்காரணமாக, பாகுபலி-2வுக்காக ஓரளவு சதைப்பற்றுடன் காணப்படும் தன்னை எஸ்-3க்காக மறுபடியும் ஹரி ஸ்லிம்மாக சொல்லி விடுவாரோ என்று பயந்து கொண்டிருந்த அனுஷ்காவுக்கு அவர் எந்த மாற்றமும் செய்யாதது பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம்.