விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கி வரு...
விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இப்படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கிறார். ஏற்கெனவே சென்னை மற்றும் மலேசியாவில் 'இருமுகன்' படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விக்ரம், நயன்தாரா பங்குபெறும் பாடல் காட்சியை தற்போது படமாக்கி வருகிறார்கள். 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்புக்கு நயன்தாரா வரும்போதெல்லாம் கூடவே அவரது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் வருகிறார். நயன்தாரா உடன் கடைசிவரை இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இருவரும் ஒரே காரில் செல்கிறார்கள்.
அடுத்தப்ட வேலையை விட்டுவிட்டு நயன்தாராவுக்கு ஜிம்பாய்ஸ் வேலை பார்ப்பது ஏன்? என்று விக்னேஷ்சிவன் பற்றி இருமுகன் படக்குழுவினர் நக்கல் அடிக்கின்றனர். அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் நயன்தாரா உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
a
