பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அதோடு பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்க ...
பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தவர் நயன்தாரா. அதோடு பேரரசு இயக்கிய சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்க வாரியா -என்ற பாடலில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு நடனமும் ஆடினார்.
ஆனால், பின்னர் அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. சில படங்களுக்காக நயன்தாராவிடம் கால்சீட் கேட்கப்பட்டபோது அதே தேதிகளில் அவர் வேறு படங்களில் கமிட்டாகியிருந்ததால் மீண்டும் அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
இந்த நிலையில், தற்போது நயன்தாரா ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதால், பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுவதில்லை என்றொரு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இதுகுறித்து நயன் தாராவைக் கேட்டால், எனக்கான கேரக்டர் பிடித்திருந்தால் எந்த படமாக இருந்தாலும் நடிப்பேன். குறிப்பாக, விஜய் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அதனால் அவருடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப் பேன் என்கிறார்.