சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்திய ரூ...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்திய ரூ.800 கோடி வசூலித்த இந்த திரைப்படத்தின் அபார கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த திரைப்படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
இந்த திரைப்படத்தை தான் தயாரிப்பதை உறுதி செய்யும் வகையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த திரைப்படம் 'கபாலி 2' என்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் தனுஷ் வெளியிட்டுள்ள வீடியோவின் பின்னணியில் 'நெருப்புடா' பாடல் ஒலிப்பதால் இந்த திரைப்படம் 'கபாலி 2' ஆக இருக்க வாய்ப்புள்ளது.
தற்போது ரஜினிகாந்த், ஷங்கரின் '2.0' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி-தனுஷ்-ரஞ்சித் இணையும் மெகா கூட்டணி திரைப்படம் தொடங்கவுள்ளது.
