கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் கடந்த 2007-ம் ஆண்டு “ஜம்பா உடுகி“ என்ற சினிமா மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் ...
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் கடந்த 2007-ம் ஆண்டு “ஜம்பா உடுகி“ என்ற சினிமா மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு “மொக்கின மனசு“ என்ற படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ராதிகா பண்டிட் நடித்தார்.
அதைத்தொடர்ந்து “ராஜதானி“ “ராமாச்சாரி“ உள்பட சுமார் 10 படங்களில் யஷ் நடித்துள்ளார். கடைசியாக அவர் ராதிகா பண்டிட்டுடன் இணைந்து நடித்த ராமாச்சாரி மற்றும் மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இது யஷ்-ராதிகா பண்டிட் ஜோடிக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. கன்னட சினிமாவில் யஷ்-ராதிகா பண்டிட் பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் காதலித்து வருவது தற்போது பகிரங்கமாகியுள்ளது. இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இதில் கன்னட திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.