நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இன்றும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் படம் வெளிவந்த புதிதி...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இன்றும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் படம் வெளிவந்த புதிதில் அது சந்தித்த சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
சக்தி கிருஷ்ணசாமி இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை இயக்குனர் பி.ஆர்.பந்துலு திரைப்படமாக இயக்கினார். தயாரிப்பாளரும் பி.ஆர்.பந்துலு தான். முதலில் கேவா கலரில் படமான கட்டபொம்பன் படத்தை பி.ஆர்.பந்துலு வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று டெக்னிக் கலராக மாற்றி வந்தார்.
1857ம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தையே முதல் சுதந்திர போராட்டமாக அரசு அறிவித்திருந்தது. கட்டபொம்மன் கதை அதற்கும் முந்தைய கால கட்டம் என்பதால் அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் கட்டபொம்மன் படத்தை போலியான கதை என்று வர்ணித்தது.
"கட்டபொம்மன் தெலுங்கன், வழிப்பறி கொள்ளைக்காரன் அவனுக்கு முன்பே பூலித்தேவன் என்கிற தமிழன்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து போராடினான். கட்டபொம்மன் கதை வெறும் செவி வழி கதைதான்" என்றார் எழுத்தாளர் தமிழ்வாணன்.
"கட்டபொம்மைனை விட மருது பாண்டியர்கள்தான் மாவீரர்கள்" என்றது தி.மு.க., கவியரசர் கண்ணதாசனும் கட்டபொம்மன் படத்தை ஏற்கவில்லை. மருது பாண்டியர்கள்தான் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கூறி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு போட்டியாக மருது பாண்டியர்கள் வரலாற்றை அடிப்படையாக கொண்ட சிவகங்கை சீமை படத்தை தயாரித்தார்.
இத்தனை எதிர்ப்புகளையும் மீறி வீரபாண்டிய கட்டபொம்மன் வெள்ளிவிழா கொண்டாடியது. 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியாகி 100 நாட்கள் ஓடியது.