நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை' என்று கவிதை பாடிய சாகாவரம் பெற்ற பல பாடல்களை எழுதிய கவியரசு கண்ணதாசனை ...
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை'
என்று கவிதை பாடிய சாகாவரம் பெற்ற பல பாடல்களை எழுதிய கவியரசு கண்ணதாசனை இன்று காலன் அழைத்து கொண்ட நாள். ஆம் கடந்த 1981ஆம் ஆண்டு இதே அக்டோபர் 17ஆம் தேதி தான் கண்ணதாசன் நம்மை விட்டு மறைந்தார். அவர் மறைந்து 35 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் அவரது பாடல்களுக்கு என்றுமே அழிவில்லை.
மரணம் என்பது அனைவருக்கும் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு என்றாலும் மரணத்தை பற்றி அவர் எழுதிய பல பாடல்கள் அனைவரின் மனதைவிட்டு மறையாமல் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது.
வாழ்க்கை என்பது வியாபாரம் - வரும்
ஜனனம் என்பது வரவாகும் - அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா
என்ற வரிகள் இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் கண்டிப்பாக மரணம் என்ற நிகழ்வை சந்தித்தே ஆக வேண்டும் என்ற இயல்பு நிலையை உணர்த்துகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள குறைந்த காலத்தில் மனிதன் பிறருக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்பது இதன் உட்பொருளாக கருதப்படுகிறது.
இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா
இந்த வரிகள் எவ்வளவு நிஜம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் புரியும்
கண்ணதாசன் ஒரு காலத்தில் புகழ் பெற்ற பாடலாசிரியராக இருந்ததால் அவருக்கு செல்வம் கூரையை பிய்த்து கொண்டு கொட்டியது. ஆனால் எதிர்காலத்தில் தனக்காகவும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்காகவும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் கண்ணதாசன்
"கல்லாகப்படுத்திருந்து களித்தவர் யாருமில்லை.
கைகால்கள் சோர்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை.
வந்ததை வரவில் வைப்போம்
சென்றதைச் செலவில் வைப்போம்"
என்று 'பாவமன்னிப்பு' படத்தில் பாட்டெழுதியவர், தனக்கு வந்த பொருளை வரவில் வைக்காமல், படங்கள் தயாரித்தும், அரசியலில் கால் வைத்தும் அவர் தேடிய செல்வத்தை அதன் அருமை தெரியாமல் செலவு செய்தார். தன்னுடைய வரவு செலவு குறித்து அவர் ஒரு கட்டுரையில் கூறியபோது, 'பிர்லாவைப் போல சம்பாதித்தேன். ஊதாரியைப் போல செலவழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது..” என்று கூறியுள்ளார்.
கண்ணதாசனுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தனக்கு இருக்கும் கெட்ட பழக்கங்களை மறைக்க முயற்சி செய்வதில்லை.
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்
என்று தன் நிறைகளையும் குறைகளிலும் 'இரத்தத்திலகம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அவ்ர் தனக்கு சரியென மனதில் பட்டத்தை வெளியே சொல்லவும், அதன் படி செய்யவும் தயங்கியதே இல்லை. அது தவறென்று உணரும்பட்சத்தில் அந்த தவறை ஒப்புக்கொள்ளவும் அவர் தயங்கியது இல்லை. தன்னுடைய வாழ்க்கையை கண்ணதாசன் அந்த அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். மேலும் வனவாசம், மனவாசம், எனது வசந்தகாலங்கள், எனது சுய சரிதம் ஆகிய 4 நூல்களிலும் அவருடைய வாழ்க்கையில் நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் கூறியுள்ளார்.
”எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது..” என்று தைரியமாக கூறியவர் கண்ணதாசன்
எனவே கண்ணதாசன் வாழ்வில் நடந்ததை பின்பற்றாமல் அவர் கூறிய அறிவுரைகளை மட்டுமே பின்பற்றுவது நாம் அனைவரும் அவருக்கு செலுத்தும் நன்றியாகும். காலத்தால் அழியாத காவிய பாடல்களை கொடுத்த கண்ணதாசன் குறித்து இந்த நினைவு நாளில் பகிருந்து கொள்வதில் பெருமை அடைகிறோம்.