செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் கான். இப்படத்தின் பூஜையெல்லாம் போட்டு, வேகவேகமாக படப்பிடிப்பு நடந்தது.இதில் சிம்புவிற்கு ஜ...
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் கான். இப்படத்தின் பூஜையெல்லாம் போட்டு, வேகவேகமாக படப்பிடிப்பு நடந்தது.இதில் சிம்புவிற்கு ஜோடியாக மெட்ராஸ் கேத்ரின் நடித்தார், பின் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது.
இதை தொடர்ந்து தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பேட்டியளிக்கையில் கான் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.இவர் கூறுகையில் ‘செல்வராகவன் ஒரு அற்புதமான இயக்குநர். அவரது இயக்கத்தில் நடிப்பது சிறப்பான விஷயம். ‘கான்’ படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்தப் படம் தாமதமாவதும், கைவிடப்படுவதும் என் கட்டுப்பாட்டில் இல்லை’ என கூறியுள்ளார்.