நடிகை அசினுக்கும், தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 19-ந் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடந்...
நடிகை அசினுக்கும், தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 19-ந் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில், திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, மும்பையில் வரவேற்பு நடந்தது. இந்த நிலையில், ‘அசின் தான் என் உலகம்’ என்று அவரது கணவர் ராகுல் சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ள அவர், அத்துடன் ‘என் உலகத்தை கரங்களால் பிடித்திருக்கிறேன்’ என்றும் புன்னகை தவழ அதில் பதிவு செய்துள்ளார்.