விஜயகாந்த் சென்னை எண்ணூரில் இரண்டு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மீனவர்கள் மட்ட...
சென்னை எண்ணூரில் இரண்டு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதனால் மீனவர்கள் மட்டுமின்றி மீன் உள்பட லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மனிதர்கள் யாருக்கும் ஆபத்து இல்லையென்றாலும் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாகியுள்ளதோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது.
இந்நிலையில் எண்ணெயை அகற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும்போது நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் இன்னும் மனிதர்களே எண்ணெய் படலத்தையும் நீரில் கலந்த மாசுகளையும் தூய்மைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. மேலும் ஜல்லிக்கட்டு காளைக்காக வரிந்து கட்டி தடை வாங்கிய பீட்டா தற்போது ஆயிரக்கணக்கான மீன்கள் பாதிக்கப்பட்டிருந்தும் அமைதியாக இருப்பது ஏன்? என்று விஜயகாந்த் சாட்டையடி கேள்வியை எழுப்பியுள்ளார்.
விஜயகாந்த் கூறியபடி வங்கக்கடலை வாளியை கொண்டு சுத்தப்படுத்தாமல் உடனே மத்திய மாநில அரசுகள் நவீன கருவிகளை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து எண்ணெய் கழிவுகளை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.