கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக விளங்கும் திரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் தற்போது சொந்த குரலில் டப்பிங் பேச தொடங்கிவிட்டனர். தற்போது அந்த வரிசைய...
கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக விளங்கும் திரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் தற்போது சொந்த குரலில் டப்பிங் பேச தொடங்கிவிட்டனர். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம்பிடித்துள்ளார்.
இவர் தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும் ‘தர்மதுரை’ படத்தில்தான் சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ளார். இப்படத்தில் தமன்னா மதுரை பெண் வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இதில் சொந்த குரலில் பேசி நடித்தால் அது நிச்சயம் எனவும் இயக்குனர் கூறியதால் தமன்னா இந்த முடிவை எடுத்தள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பாஷையில் பேச தமன்னா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மதுரை மற்றும் தேனி பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.