‘பாய்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகுல். இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியும் ஆவார். ‘...
‘பாய்ஸ்’ படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகுல். இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பியும் ஆவார். ‘பாய்ஸ்’ படத்தை தொடர்ந்து, ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘வல்லினம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நகுலுக்கும் ஸ்ருதி என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று காலை இவர்களது திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 10.41க்கு நகுல், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
இந்த திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் தாணு நேரடியாக இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் நேரிலும், போனிலும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.