பிரபல தெலுங்கு நடிகர் ரமண மூர்த்தி திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83. ரமண மூர்த்தி, 1957-ல் ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்கு படம் மூலம் சினி...
பிரபல தெலுங்கு நடிகர் ரமண மூர்த்தி திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83. ரமண மூர்த்தி, 1957-ல் ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசன் நடித்து ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘மரோசரித்திரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படம் 1981-ல் தெலுங்கில் ‘ஆக்களி ராஜ்ஜியம்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனின் தந்தை கதாபாத்திரத்தில் ரமண மூர்த்தி நடித்து இருந்தார்.
பாதசாரி, சப்தாபதி, சுபலேகா, ஸ்ரீவெண்ணிலா, சங்கர்தாதா ஜிந்தாபாத் உள்பட 150-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ‘சங்கராபரணம்’ படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சோமையாஜுலுவின் தம்பி ஆவார். ஐதராபாத்தில் உள்ள அமீர் பேட்டையில் குடும்பத்துடன் அவர் வசித்து வந்தார். ரமண மூர்த்திக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.