'தெறி' சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நட...
முதன்முதலாக நெல்லை தமிழ் பேசும் மருத்துவ கல்லூரி மாணவராக விஜய் நடித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே 'லிங்கா' வில்லன் ஜெகபதிபாபு மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் வில்லன்களாக நடித்து வருகின்றனர் என்பது அறிந்ததே. இந்நிலையில் மூன்றாவது வில்லனாக பிரபல வில்லன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர்தான் ஆர்.கே.சுரேஷ்
பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'தாரை தப்பட்டை' உள்பட பல படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் இணைந்தது இந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.
'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்