கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் நயன்தாரா சமீபகாலமாக இளம் நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். ஆரி, வி...
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் கேரக்டர் குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும், ஆனால் அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகையின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.
'இமைக்கா நொடிகள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என தெரிகிறது.