நடிகர் தனுஷ் பிரபு சாலமன் இயக்கத்தில் ரயில் படத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து எதிர்நீச்சல் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கொடி என்ற ப...
நடிகர் தனுஷ் பிரபு சாலமன் இயக்கத்தில் ரயில் படத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து எதிர்நீச்சல் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கொடி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தில் ஷாம்லி நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவருக்கு பெரிய கதாபாத்திரம் இல்லாததால் அவர் விலகியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் 'பிரேமம்' மடோனோ செபாஸ்டியன்(செலின்) நடிக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் மடோனா இந்த செய்தி உண்மையில்லை என்று மறுத்துள்ளாராம். தற்போது பிரேமம் படத்தில் மேரியாக நடித்த அனுபமா நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.