சமீபத்தில் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த உலக நாயகன் கமல்ஹாசன் ஒருசில வாரங்கள் சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்....
இதுவரை பிறருடைய துணையுடன் எழுந்து நடமாடி வந்த கமல், தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் சிறிய அளவில் வாக்கிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக ஐம்பது வயதுக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் எழுந்து நடமாடுவது கடினம். ஆனால் மன உறுதியும் தன்னம்பிக்கையும் உடைய கமல், யாருடைய துணையும் இன்றி எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் இன்னும் ஒருசில வாரங்களில் கலந்து கொள்வார் என்றும் பழைய சுறுசுறுப்பான கமல்ஹாசனை விரைவில் காணலாம் என்றும் கூறப்படுகிறது.