‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னக திரை உலகி...
‘ஜோடி’ படத்தில் சிம்ரன் தோழியாக வந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா.
தொடர்ந்து 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னக திரை உலகின் நாயகியாக இருந்து வருகிறார். தென் இந்திய பிரபல நாயகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். ஆனால் இதுவரை ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுபற்றி கூறிய திரிஷா....
“நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது என்றாலும், இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. மனதுக்குள் இது ஒரு வருத்தமாகவே இருக்கிறது. அவருடன் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?
விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நல்ல படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
நான் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நாயகியாக நடிப்பது பற்றி பலர் கேட்கிறார்கள். வேறு யாரும் இத்தனை ஆண்டுகள் ஹீரோயினாக இருந்ததில்லை என்று சொல்வதை பார்க்கும் போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன். நடிப்பதுதான் என் தொழில்.
மாடலிங் செய்த போது நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதன் பிறகு எதிர்காலம் நம் கையில் இல்லை என்பதை உணர்ந்து நடிகை ஆனேன். இப்போது வாழ்க்கையின் போக்கில் செல்கிறேன்” என்றார்.