ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சந்திரமுகி’. இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘மணிசித்திரதாழ்’ படத...
ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சந்திரமுகி’. இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘மணிசித்திரதாழ்’ படத்தின் ரீமேக் ஆகும். இயக்குனர் பி.வாசு இயக்கி வெளிவந்த இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பி.வாசு சமீபத்தில் கன்னடத்தில் இயக்கி வெளிவந்த ‘சிவலிங்கா’ படம் அங்கு மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. அதைத் தொடர்ந்து அப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலைகளில் தற்போது பிசியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தை ‘சந்திரமுகி -2’ என்ற பெயரில் எடுக்கவிருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயாகனாக லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், தற்போது நாயகியாக ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ரித்திகா சிங் தற்போது ‘காக்காமுட்டை’ இயக்குனர் மணிகண்டன் இயக்கும் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘சந்திரமுகி-2’ படத்தை டிரிடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் குறித்து மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.